ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்கிறார் கமல்ஹாசன்

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார்.

Update: 2022-12-18 09:09 GMT

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 100-வது நாளை எட்டியுள்ளது.  இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார்.டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள  பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்