குப்பை கிடங்கில் கல்யாணசுந்தரம் எம்.பி. ஆய்வு

குப்பை கிடங்கில் கல்யாணசுந்தரம் எம்.பி. ஆய்வு

Update: 2022-09-25 20:26 GMT

பாபநாசம் பேரூராட்சி திருப்பாலைத்துறை எஸ்.பி.ஜி. மிஷின் தெருவில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுவதால் அருகில் குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குப்பை கிடங்கு அமைந்துள்ள இடத்தை கல்யாணசுந்தரம் எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தரம் பிரிப்பதற்கான ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யாராசு, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், சமீரா பர்வீன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்