கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், இணையதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கல்வராயன்மலையின் வளர்ச்சி, தூய்மை பணிகள், வரவு- செலவுகள், சாலை பணிகளை மேம்படுத்துவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் செல்வராஜ், மலர்ராஜ்குமார், மின்னல்கொடிசக்திவேல், செல்லதுரை, பார்வதிஅண்ணமலை, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.