5-வது நாளாக கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

5-வது நாளாக நடந்த கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெருந்துறை அருகே நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

Update: 2023-06-30 21:33 GMT

பெருந்துறை

5-வது நாளாக நடந்த கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெருந்துறை அருகே நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.

வேலை நிறுத்த போராட்டம்

அனைத்து துறை அரசு அதிகாரிகளும் ஆய்வு செய்யப்பட்டு, முறையாக அனுமதி பெற்று இயங்கி வரும் கல்குவாரிகள் மீது, தனி நபர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிறு கனிமங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்கிற பெயரில், பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் மோசடி நபர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்றும் இந்த வேலைநிறத்த போராட்டம் தொடர்ந்து நடந்தது.

லாரிகள் நிறுத்தி வைப்பு

இந்த போராட்டம் காரணமாக ஈரோடு தாலுகாவை சேர்ந்த கல்குவாரி மற்றும் ஜல்லி கிரசர் உரிமையாளர்கள், தங்களது நூற்றுக்கணக்கான லாரிகளை பெருந்துறையை அடுத்த சரளை அருகே வரிசையாக நிறுத்தி வைத்தனர்.

இதனால் பெருந்துறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்த கட்டுமானங்களுக்கு தேவையான ஜல்லி, கிரசர் மண், கல் ஆகியவை கிடைக்கவில்லை. அரசின் முடிவு தெரியும் வரை போராட்டம் தொடரும் என அந்த பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்