கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உதயம் நகரில் இருந்து ஏழுர் செல்லும் சாலையோரத்தில் கல்குவாரி உள்ளது. இது தற்போது செயல்படாமல் உள்ளது. இங்கு மழை பெய்யும்போது, அங்குள்ள குட்டையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அங்கு தடுப்புச்சுவர்கள் ஏதும் இல்லை.
இந்த நிலையில் திறந்தவெளியில் உள்ள அந்த கல்குவாரியில், சாலையில் செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், தண்ணீரில் பாய்ந்து உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. மேலும் தண்ணீர் மாசடைந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இது தவிர 7 பேர், அந்த கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து உள்ளனர். எனவே அந்த கல்குவாரி குட்டையை மூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.