நாமக்கல் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-06-22 18:51 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீர தீர செயல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவில் 2022-ம் ஆண்டில் தைரியமாக சமுதாய தொண்டு செய்து சாதனை புரிந்த பெண் ஒருவருக்கு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

இதற்காக வீர, தீர மற்றும் சாகச செயல்கள் புரிந்த தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு விண்ணப்பம் செய்பவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம்

சாதனை புரிந்த விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பம் மற்றும் ஆவணம் அடங்கிய விரிவான தொகுப்புகளை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்