கள்ளக்குறிச்சி கலவரம்: பள்ளி பேருந்தை சேதப்படுத்திய வாலிபர் கைது
கள்ளக்குறிச்சி கலவரத்தில் பள்ளி பேருந்தை ஓட்டி மற்றொரு பேருந்தை இடித்து சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துக்கள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துக்களக சேதப்படுத்தியவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கலவரத்தில் பள்ளி பேருந்தை ஓட்டி மற்றொரு பள்ளி பேருந்தை இடித்து சேதப்படுத்திய சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் சிவா(எ)வினோத் (வயது-23) என்ற வாலிபரை வீடியோ ஆதாரங்கள் வைத்து சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.