கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்தும். சாலை விபத்துகள் தொடர்பாகவும், விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் சாலை விபத்துகளை குறைத்திட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிய உரிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் வேண்டும். கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் போன்ற நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டா் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், கோட்டாட்சியர்கள் கள்ளக்குறிச்சி பவித்ரா, திருக்கோவிலூர் யோகஜோதி, கூடுதல் உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குநர் ரத்தினமாலா, கள்ளக்குறிச்சி மண்டல போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், உளுந்தூர்பேட்டை மண்டல போக்குவரத்து அலுவலர் செந்தூர்வேல், குற்றவியல் அலுவலக மேலாளர் விஜயபிரபாகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், பழனி மற்றும் தாசில்தார்கள், வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.