கள்ளக்குறிச்சி மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-07 14:49 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்ட கோவில் பூசாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் சின்னசேலம் விஜயபுரம் செல்வம் முருகன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வாசு தலைமை தாங்கி கிராமப்புற பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். மாவட்ட செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கும், பூசாரிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் நன்றி தெரிவிப்பது, ஒரு கால பூஜை நடத்தும் கோவில் பூசாரிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். வயது முதிர்ந்த கிராம பூசாரிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், மாவட்டம் தோறும் அறநிலையத்துறை மூலம் பூசாரிகளுக்கு வழிபாட்டு பயிற்சி முகாம்களை தமிழ் வழியில் நடத்த வேண்டும், நலவாரிய உறுப்பினர்களுக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட கிராமப்புற கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பழனி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்