கள்ளக்குறிச்சி : பள்ளி வன்முறையில் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி வன்முறையில் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-08-21 06:44 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி வன்முறையில் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் வன்முறை வெடித்தது. பள்ளியின் சொத்துக்களையும், போலீசார் வாகனத்தையும் சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் விக்னேஷ், சூர்யா, மணிவாசகம், லோகேஷ், மாரிமுத்து உள்ளிட்ட ஐந்து பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, இவர்களை கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முகமது அலி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். இவர்களை 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 342 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்