மலேசியாவிற்கு செல்லும் கள்ளழகர் கோவில் பட்டு வஸ்திரம், பூஜை பொருட்கள்

மலேசியாவிற்கு கள்ளழகர் கோவில் பட்டு வஸ்திரம், பூஜை பொருட்கள் செல்கிறது

Update: 2023-05-18 19:20 GMT

அலங்காநல்லூர்

தமிழக அரசு சார்பில், இதர மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள கோவிலுக்கும் தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்கும் இடையே நல்லிணக்க உறவை மேம்படுத்த கோவில் வஸ்திர மரியாதை செய்யப்படும்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி மதுரையில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், பிரசாதங்கள், உள்ளிட்ட பூஜை பொருட்கள், பூ மாலைகள் மேளதாளம் முழங்க, வர்ணக் குடைகள், பரிவாரங்களுடன், சுந்தரவல்லி யானை முன்செல்ல எடுத்து செல்லப்பட்டது. பின்னர். இந்த பூஜை பொருட்கள் அனைத்தும் மலேசியாவிற்கு விமானத்தில் எடுத்து செல்லப்பட்டது. மலேசியா நாட்டின் சிலாங்கூரில் உள்ள கில்லாங் பெருமாள் கோவில் என்று அழைக்கப்படும் சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு பட்டுவஸ்திரங்கள் உள்பட பூஜை பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. பூஜை பொருட்களுடன் கோவில் துணை ஆணையர் ராமசாமி, பட்டர் மற்றும் அலுவலக பணியாளர் உள்ளிட்டோர் மலேசியா சென்றனர். தமிழகத்தில் மொத்தம் 4 கோவில்களில் இருந்து இந்த வஸ்திர மரியாதை வெளிநாட்டிற்கு செல்கிறது. இதில் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் ஆகிய 2 கோவில்களில் இருந்து பட்டுவஸ்திர மரியாதை மலேசியா நாட்டிற்கு செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்