கழுகுமலையில் விவசாயிகள் சங்க தாலுகா குழு கூட்டம்

கழுகுமலையில் விவசாயிகள் சங்க தாலுகா குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-08 18:45 GMT

கழுகுமலை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு கூட்டம் கழுகுமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாலுகா விவசாய சங்க தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்து பேசினார். கூட்டத்தில் வருகிற‌ 25-ந் தேதி பெருமாள்பட்டியில் நடைபெறும் தாலுகா மாநாட்டிற்கு அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். உரம், பூச்சி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க செய்ய வேண்டும். அனைத்து குளங்களையும் தூர்வாரி ஆழப்படுத்தி நீர்வரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 60 வயது முதிர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர்கள் லட்சுமணபெருமாள், எட்டப்பன், கருப்பசாமி, சங்கரலிங்கம், பெருமாள், சீனிவாசன், ராமலிங்கம், சிதம்பரம் மற்றும் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்