காளி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கொடைரோடு அருகே காளி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-30 15:55 GMT

கொடைரோடு அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி பொட்டிசெட்டிபட்டியில் சக்தி விநாயகர், பாலமுருகன், காளி பகவதி அம்மன், பொன்னழகு மாரியம்மன் கோவில்களில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல் அங்குள்ள காத்தாளம்மன், வெம்பலயப்பன், வெள்ளிமலை சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இந்த கோவில்களில் கடந்த 2 நாட்களாக யாகசாலை பூஜை, தீபராதனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து  சக்தி விநாயகர், பாலமுருகன், பொன்னழகு மாரியம்மன், காளி பகவதி அம்மன் கோவில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, கோபுரத்தின் மேல் கருடன் வட்ட மிட்டதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அபிஷேகம், தீபாரதனை செய்தும் பக்தர்கள் வழிப்பட்டனர். மேலும் 2 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இந்த விழாவில் சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இரவு தெம்மாங்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பொட்டிசெட்டிபட்டி சாலிய வாகன குலாலா சமூகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்