கழுகுமலை கோவில் கொடைவிழா:பாக்தர்கள் பால்குடம் ஊர்வலம்

கழுகுமலை கோவில் கொடைவிழாவை முன்னிட்டு பாக்தர்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலையில் ராஜகுலத்தோர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்ணார் ஊரணி கரையிலுள்ள வண்ணார் மாடசாமி, கன்னி விநாயகர், மாரியப்பன், நாகம்மன், கருப்பசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மண்டல பூஜை நடந்தது. காலை 9 மணியளவில் மேளதாளம் முழங்க கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் ஊர்வலமா சென்று கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் அக்கினி சட்டி எடுத்து ஊர்விளையாடல், இரவு 7 மணிக்கு வடக்குத்தி அம்மனை வழியனுப்புதல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. வரும் 25 -ந்தேதி எட்டாம் பொங்கல் விழா நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்