கழுகுமலை கோவில் கொடைவிழா:பக்தர்கள் பால்குட ஊர்வலம்
கழுகுமலை கோவில் கொடைவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடத்தினர்.
கழுகுமலை:
கழுகுமலை இந்திரபிரஸ்தம் தெரு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உச்சி மகா காளியம்மன், அக்னிமாரியம்மன் கோவில் கொடை விழா கடந்த 31-ந்்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 10 மணியளவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜை மற்றும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு ஆயிரம் கண் பானை அக்கினி சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு சாமகொடை பூஜை நடைபெற்றது. இன்று (புதன் கிழமை) காலை 10.30 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவேந்திர குல வேளாளர் சமுதாய இளைஞரணியினர் செய்துள்ளனர்.