சுற்றுலா பயணிகளை கவரும் களக்காடு தலையணை
சுற்றுலா பயணிகளை கவரும் களக்காடு தலையணை பற்றி அறிந்து கொள்ளலாம்
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தென்றல் தாலாட்டும் இந்த மலையில் பல்ேவறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இதில் களக்காடு தலையணையும் ஒன்றாகும்.
களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலையணைக்கு செல்ல களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினரிடம் அனுமதி பெற்று, நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். ஓங்கி உயர்ந்த மரக்கூட்டங்களில் அடர்த்தி, சுற்றிலும் பச்சைப்பட்டு உடுத்தியது போல் காட்சி அளிக்கும் பசுமையான செடிகள், அவற்றின் நடுவே பாறைகளின் மீது மோதி வெள்ளை நிற நுைரயை அள்ளிவரும் தண்ணீரை பார்த்ததுமே அதில் குளிக்க தோன்றுவது தனிச்சிறப்பாகும்.
தலையணை ஓடி வரும் இடங்களில் ஏராளமான மூலிகை செடிகளை தழுவியபடி தண்ணீர் ஓடி வருவதால் அதில் குளித்தால் உடம்பிற்கும், உள்ளத்திற்கும் புதுத்தெம்பு கிடைக்கும் என்றால் அது மிகையாகாது.
அங்குள்ள தடுப்பணை அருவியில் குளிக்கும் போது, மீண்டும் மீண்டும் குளிக்க ஆவல் ஏற்படும் அளவிற்கு தண்ணீரில் குளுமை அதிகம் ஆகும்.
தலையணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறுவர் பூங்கா, மீன் கண்காட்சியகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது. இதனால் தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.