கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது - மதுரை ஐகோர்ட்டு வேதனை
.விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை,
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது ."விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் இயல்-இசை-நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத்தை கலைக்க நேரிடும்.என கருத்து தெரிவித்துள்ளனர்.
2019 - 2020ம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற கோரிய வழக்கில் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது