கீழத்தட்டப்பாறையில் கலைஞரின் வருமுன்காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

கீழத்தட்டப்பாறையில் கலைஞரின் வருமுன்காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-09-08 12:08 GMT

தூத்துக்குடி அருகே உள்ள கீழத்தட்டப்பாறையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமை தூத்துக்குடி வட்டார மருத்துவ அலுவலர் செல்வரத்தினம் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தோல் நோய் டாக்டர் செந்தில் தலைமையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், கருவுற்ற தாய்மார்களுக்கான ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் காமாட்சி, புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்