கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

கடையம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-01-23 18:45 GMT

கடையம்:

கடையம் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள கைலாசநாதர்- பஞ்சகல்யாணி அம்பாள் கோவிலில் 13 வருடங்களுக்கு பிறகு வருகிற 27-ந்தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி 24-ந் தேதி காலை 8 மணிக்கு சத்ருசம்ஹார ஹோமமும், மாலை 6 மணிக்கு துர்க்கா, சரஸ்வதி, ஹோமும் நடக்கிறது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு தம்பதி பூஜை, 11 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 26-ந் தேதி காலை 8 மணிக்கு 2-ம்கால யாகசாலை பூஜை, மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 

27-ந் தேதி காலை 6 மணிக்கு கும்பம் எழுந்தருளல், 6.45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 7.15 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 10 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 10.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு சுவாமி வீதி உலா நடக்கிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அசோக்குமார், ஆய்வாளர் சரவணகுமார், தக்கார் கோமதி, பக்தர் பேரவையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்