கடையநல்லூர் நகராட்சி கூட்டம்

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் நடந்தது.

Update: 2022-05-31 15:21 GMT

அச்சன்புதூர்:

கடையநல்லூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ஹபிபுர்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் ராசையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு நகரசபை தலைவர், தமிழ்நாடு வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் தொட்டிகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தாமிரபரணி குடிநீரை நகராட்சி முழுவதும் வினியோகம் செய்ய முடியும். மேலும் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

நகராட்சி வாரச்சந்தையில் தண்ணீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருவதாக கவுன்சிலர் யாசர்கான் கூறினார். அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரசபை தலைவர் தெரிவித்தார். சில பணிகள் குறித்த ஒப்பந்தப்புள்ளி கோருவது தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிகாரிகள், நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இனிமேல் இதுபோன்று நடைபெறாது என்று தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்