கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மேலாளர் சண்முகவேல், நகர அமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் பேசியதாவது:- கடையநல்லூர் நகராட்சி 33 வார்டு பகுதிகளிலும் ஒரு வார்டுக்கு வார்டு உறுப்பினரை தலைவராக கொண்டு தலா நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து, வார்டு குழு மற்றும் ஏரியா சபா ஏற்படுத்துவது, அதன் மூலம் அந்த வார்டு பகுதியில் உள்ள மக்கள் பிரச்சினைகளை வார்டு குழு மற்றும் ஏரியா சபா கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அத்தீர்மானத்தை நகர்மன்ற தலைவரிடம் வார்டு உறுப்பினர் வழங்க வேண்டும். இதுதான் நகராட்சி வார்டு குழு மற்றும் ஏரியா சபா கூட்டத்தின் பொருள் என வாசித்தார். உடனே தீர்மானத்தை அனைத்து வார்டு உறுப்பினர்களும் ஒரு மனதாக நிறைவேற்றினர்.