கடையம் கரடி மாடசாமி கோவில் கொடை விழா
கடையம் கரடி மாடசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடையம்:
கடையத்தில் இருந்து ரவணசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள நெடுங்காவல் உடையார் தர்மசாஸ்தா கரடி மாடசாமி கோவில் கொடை விழா நடந்தது. இதையொட்டி சாஸ்தாபரிதி, குடி அழைப்பு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் கொடை விழாவை முன்னிட்டு காலையில் பால்குடம் எடுத்து வருதல், மதியம் ஆற்றில் இருந்து கிரகம் எடுத்து வருதல், மத்தியான பூஜை, இரவு சாமக்கொடை, படைப்பு தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.