கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில்அ.தி.மு.க.வில் இணைந்த தே.மு.தி.க.வினர்

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-08-07 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

காமநாயக்கன்பட்டியில் அ.தி.மு.க. கயத்தாறு கிழக்கு ஒன்றிய கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தே.மு.தி.க. கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் என்ற அருளானந்தம் தலைமையில் 50 தே.மு.தி.க.வினர், அக்கட்சியில் இருந்து விலகி எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, காமநாயக்கன்பட்டி கிளை செயலாளர் கித்தேரியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்