கடமலைக்குண்டு, வருசநாடு பகுதிகளில்மதுபானம் விற்ற 8 பேர் சிக்கினர்
கடமலைக்குண்டு, வருசநாடு பகுதிகளில் மதுபானம் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் மதுபானம் விற்பனை தொடர்பாக நேற்று முன்தினம் கடமலைக்குண்டு மற்றும் வருசநாடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேருஜிநகர் டாஸ்மாக் கடை அருகே மதுபானம் விற்ற மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த பிரபு (வயது 34), முத்து (45) மற்றும் மூலக்கடை கிராமத்தில் மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (39), செல்லையா (54) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் முருக்கோடை அருகே மொட்டைப்பாறை, பூசனூர், வாலிப்பாறை ஆகிய பகுதிகளில் மதுபானம் விற்ற அழகுமணி (46), பாண்டி (55), கொடியரசன் (62), பாஸ்கரன் (58) ஆகிய 4 பேரை வருசநாடு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 36 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.