கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பணியிடை நீக்கம்

கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பணியிடை நீக்கம்

Update: 2023-08-03 18:45 GMT

செயலாளர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு நடவடிக்ைக எடுக்காததால் கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரை பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் கூட்டுறவு இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுகள்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அ.தி.மு.க. பிரமுகர் வெற்றிவேல் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்த வங்கியில் செயலாளராக பணியாற்றிய தனசேகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டு மீது வெற்றிவேல் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் வந்தது.

பணியிடை நீக்கம்

செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காததால் திருவாரூர் கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனை கண்டித்து கச்சனம் கூட்டுறவு சங்கம் முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெற்றிவேல் தலைமையில் துணைத்தலைவர் பாலகுரு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 நாட்களில் பதவி முடிகிறது

இதுகுறித்து வெற்றிவேல் கூறுகையில், இது பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. நான் எந்தவித தவறும் செய்யவில்லை. அனைத்துமே சட்டப்படி முறையாக நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக நான் கோர்ட்டில் வழக்கு தொடர்வேன் என்றார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வெற்றிவேலுக்கு இன்னும் 5 நாட்களில் பதவி முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்