பழனியில் மாநில அளவிலான கபடி போட்டி
பழனியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில், பாஸ்கர சேதுபதி நினைவு கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி பழனியில் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல், மதுரை, திருப்பூர், திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 56 அணிகள் கலந்துகொண்டன.
போட்டியை வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திரபூபதி தொடங்கி வைத்தார். கபடி கழக மாநில துணை செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். போட்டிகள் நாக்அவுட் முறையில் நடந்தது. போட்டியில் பழனி அ.கலையம்புத்தூர் அணி முதலிடம் பிடித்தது. உடுமலை, தாராபுரம் அணிகள் முறையே 2-ம், 3-ம் இடத்தை பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.