பணகுடியில் கபடி போட்டி

பணகுடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபடி போட்டி நடந்தது.

Update: 2022-11-29 20:17 GMT

பணகுடி:

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு பணகுடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பகல்-இரவு கபடி போட்டி நடந்தது. நெல்லை தெற்கு மாவட்ட பொருளாளர் செங்கோல் ஜான்சன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் அப்பா குட்டி, மாவட்ட தலைவர் சூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து 56 அணிகள் கலந்துகொண்டன.

இறுதியில் பணகுடி ரோஸ்மியாபுரம் அணியினர் முதலாவது பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை பெற்றனர். நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சகாய இனிதா பரிசுகள் வழங்கினார். 2-வது இடம் பிடித்த கூடங்குளம் அணியினருக்கு ரூ.15 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த ரெட்டிதட்டு அணியினருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பணகுடி நகர செயலாளர் முத்துராஜ், நகர தலைவர் ஸ்டீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்