கபடி போட்டி பரிசளிப்பு விழா
நாசரேத் அருகே கபடி போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள மேலவெள்ளமடத்தில் ஒயிட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. இதில் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் மெஞ்ஞானபுரம் அணி முதல் இடத்தையும், மேலவெள்ளமடம் அணி 2-வது இடத்தையும், மீரான்குளம் அணி 3-வது இடத்தையும், சின்னமாடன் குடியிருப்பு அணி 4-வது இடத்தையும்பிடித்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜினஸ் குமார் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பணம் மற்றும் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை மேலவெள்ளமடம் ஒயிட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.