சிவகாசி
சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கல்லூரியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்தும் 40 அணிகள் கலந்து கொண்டன.. போட்டிகளை கல்லூரியின் தலைவர் ராஜூ தொடங்கி வைத்தார். செயலர் முத்துகுமார் தலைமை தாங்கினார். முதல்வர் உஷாதேவி முன்னிலை வகித்தார். தொழிலதிபர் சீனிவாசன், ஆசிரியர் சையது முகமது ஆரிப் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். போட்டியில் மாணவர்கள் பிரிவில் முதல் பரிசை சிவந்திபட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை சிவகாசி ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசை மீனாட்சிபுரம் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியும், 4-வது பரிசை விளாம்பட்டி ஏ.வி.எம். மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளியும் பெற்றது.
மாணவிகள் பிரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், ஓ.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் பரிசையும், முத்தார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 3-ம் பரிசையும் பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்