கி.ரா. நினைவரங்கில் நெய்தல் விழா

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கில் நெய்தல் விழா நடந்தது.

Update: 2023-04-22 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் 4-வது புத்தக திருவிழாவின்போது கோவில்பட்டியில் உள்ள கி.ரா. நினைவரங்கத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு அன்று சொற்பொழிவுகள், கரிசல் இலக்கியம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என ஏற்கெனவே மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்திருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலை விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.

விழாவில் கரிசல் இலக்கியங்கள் குறித்தும், அதில் கி.ரா.வின் பங்கு குறித்தும் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கல்லூரி மாணவ- மாணவிகளின் பரதம், கரகாட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புத்தகங்களை பொது மக்கள், மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர்.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜ், தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், கோவில்பட்டி யூனியன் ஆணையாளர் ராஜேஷ்குமார், தமிழ் அறிஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்