கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

Update: 2022-07-22 17:54 GMT

வேலூர்

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.

பிரசார கூட்டம்

இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இந்துக்களின் உரிமையை மீட்பு என்ற தலைப்பில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று வேலூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பயணத்தின் ஒரு அங்கமாக வேலூர் மண்டி தெருவில் பிரசார கூட்டம் நடைபெற்றது. வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜேஷ், பொருளாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் முருகானந்தம், செயலாளர் செந்தில்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் பேசினர்.

மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:-

வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இந்த நிகழ்ச்சி இந்துக்களின் எழுச்சியாக உள்ளது. வேலூர் மண் வீரமிக்க மண்ணாகும். தமிழகம் ஆன்மிக மண்ணாகும்.

வரலாற்றை பார்க்கும்போது தேசத்துக்கு எதிராக நின்றவர்களை இந்துக்கள் தான் விரட்டினர். வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சிலை கொண்டு வந்தது இந்து முன்னணியில் முதல் வெற்றியாகும். பல மாவட்டங்களில் இந்துக்களின் உரிமை மீட்கப்பட்டதற்கும் இந்து முன்னணி தான் காரணம். பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் இந்து கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதுகுறித்து பட்டியலை நாங்கள் அளிக்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாக்குவாதம்

விழாவில் மாநகர செயலாளர் ஆதிமோகன் மற்றும் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வேலூர் நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே வந்த மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இந்து முன்னணியினர் ஊர்வலமாக வேலூர் மண்டித்தெருவுக்கு செல்ல முற்பட்டனர்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செந்தில்குமார், கருணாகரன் மற்றும் போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இந்து முன்னணியினர் ஊர்வலமாக சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்