கடம்பூரில் மனுநீதிநாள் முகாம்:423 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ரூ.423 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

Update: 2023-04-12 21:22 GMT

டி.என்.பாளையம்

கடம்பூரில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் ரூ.423 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

கடம்பூரில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முகாமுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.4 லட்சம் மதிப்பில் நிவாரண நிதியும், 89 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 24 ஆயிரத்து 726 ரூபாய் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும், 14 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பில் முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை உதவித்தொகையையும் வழங்கினார். இதேபோல் 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களும் கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.

நலத்திட்ட உதவிகள்

வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் ஆகிய துறைகளின் சார்பில் 9 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 60 ஆயிரத்து 922 ரூபாய் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வட்ட வழங்கல் துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு நகல் குடும்ப அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு 27 ஆயிரத்து 360 ரூபாய் மதிப்பில் தையல் எந்திரமும், 2 பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 800 ரூபாய் என மொத்தம் 423 பயனாளிகளுக்கு ரூ.33.83 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைதுறை, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர், .

முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் கருத்து கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்