முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகளில் நாளை தீர்ப்பு

எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டுநாளை தீர்ப்பு வழங்குகிறது

Update: 2022-11-29 13:31 GMT

சென்னை,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

கடந்த விசாரணையின்போது எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்குகிறது

Tags:    

மேலும் செய்திகள்