முரசொலி அலுவலக வழக்கில் இருந்து நீதிபதி தண்டபாணி விலகல்
முரசொலி அலுவலக இடம் தொடர்பான வழக்கில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விலகியுள்ளார்.
சென்னை,
தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பா.ஜ.க. புகார் தெரிவித்து இருந்தது.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக வந்த நோட்டீசை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில், முரசொலி அலுவலக இடம் தொடர்பான வழக்கில் இருந்து ஐகோர்ட்டு நீதிபதி எம்.தண்டபாணி விலகியுள்ளார்.
இந்த வழக்கை வேறு நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.