ஜாய் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

மாவட்ட கைப்பந்து போட்டியில் ஜாய் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2022-10-25 18:45 GMT

தென்காசி மாவட்ட அளவில் பள்ளிக்கல்வி துறை சார்பில் கைப்பந்து போட்டி பாவூர்சத்திரம் சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வடகரை ஜாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு, சாதனை படைத்தனர். மாணவர்கள் பிரிவில் மூத்தோர், மிக மூத்தோர், பெண்கள் பிரிவில் இளையோர், மிகமூத்தோர் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி நிர்வாகி சாலமோன், முதல்வர் ஜோதி, துணை முதல்வர் கார்த்திகை கணபதி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ்குமார், விமல், மோனிஷ் உள்பட பாராட்டினார்கள்


Tags:    

மேலும் செய்திகள்