திருமணிசேறை உடையார் கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை

இஞ்சிமேடு திருமணிசேறை உடையார் கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2023-09-30 17:53 GMT

சேத்துப்பட்டு

இஞ்சிமேடு திருமணிசேறை உடையார் கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை திரு மணி சேறை உடையார் சிவன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக கூட்டுப் பிரார்த்தனை நடந்தது. இதனையொட்டி காலையில் திருமணி சேறை உடையர், திருமணி நாயகி தாயார், விநாயகர் வள்ளி, தெய்வானை, முருகன், அகத்தியர், நவகிரகங்கள், நோய்தீர்க்கும் மூலிகை, சங்குதீர்த்தம் அடிவாரத்தில் உள்ள நாக தேவதைகளுக்கு ஆகிய சன்னதிகளில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பூஜைகளை ஆனந்த் சர்மா நடத்தினார். பின்னர் சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமிகள் தலைமையில் உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அனைவருக்கும் குங்குமம், சிவப்பு கயிறு, விபூதி ஆகியவை வழங்கப்பட்டது. ஆரணி. வேலூர். சென்னை காஞ்சீபுரம், விழுப்புரம், வந்தவாசி, சித்தூர், பெங்களுரு ஆகிய ஊர்களில் இருந்து கார் மூலமாகவும் வேன் மூலமாகவும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மலையடிவாரத்தில் 'ஓம் நமச்சிவாய' 'ஓம் நமச்சிவாய' என்று பயபக்தியுடன் கிரிவலம் வந்தனர் அனைவருக்கும் மலை அடிவாரத்தில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்