வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு

வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-09-12 19:00 GMT


வால்பாறை


வால்பாறைஅரசு ஆஸ்பத்திரியில், கோவை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீரா ஆய்வு மேற்கொண்டார். அங்கு கட்டப்பட்டு வரும் வெளி நோயாளிகள் பிரிவுக்கான புதிய கட்டிட பணிகளை பார்வையிட்டார். அப்போது, நகராட்சி துணை தலைவர் செந்தில்குமார், தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் ஆகியோர் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகளை கையாளுவதற்கு தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும், இரவு காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு, தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும், தூய்மை பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பற்றாக்குறையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை இயக்குனர் மீரா தெரிவித்தார். பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் ஆஸ்பத்திரியின் செயல்பாடுகள், மகப்பேறு சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.


ஆய்வின்போது கோவை தேசிய சுகாதார ஆணைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வெங்கடேஷ், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் மகேஷ் ஆனந்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்