வேலை வாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.

Update: 2022-10-27 16:52 GMT

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கிராம மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் கண்டறிந்து, அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சோளிங்கர் வட்டாரத்தில் உள்ள இளைஞர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பத்மாபுரத்தில் உள்ள கலைபாரதி கலை கல்லூரியிலும், திமிரி வட்டாரத்தில் நாளை (சனிக்கிழமை) திமிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் கிராமப்புற இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழா நடத்தப்பட உள்ளது.

அதேபோல் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை ஆயர்பாடியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில் அரசு துறை நிறுவனங்கள், மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்புத்துறை, தனியார்த் துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி சேர்க்கைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு திருவிழாவில் கிராமப்புறத்தை சேர்ந்த படித்த மற்றும் படிக்காத 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்