தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா ஆகியவற்றின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் பங்கேற்கலாம். 8-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்றோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.