கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
பூதப்பாண்டியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவில் கும்பாபிஷேகம்
பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் மனைவி பார்வதி (வயது64) என்பவரும் தனது கலந்து கொண்டார். அவர் விழாவையொட்டி சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட தயாரான போது தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார். கூட்ட நெரிசலில் யாரோ மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மற்றொரு பெண்
இதுபோல் விழாவில் கலந்து கொண்ட பூதப்பாண்டி பிளாக் ஆபீஸ் தெருவை சேர்ந்த பெருமாள் மனைவி அன்னலட்சுமியின் (வயது 65) கழுத்தில் கிடந்த 2¼ பவுன் ்தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
இதுகுறித்தும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். கோவில் கும்பாபிஷேக விழாவில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.