கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

நாசரேத் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2022-07-29 13:31 GMT

நாசரேத்:

நாசரேத் அருகில் உள்ள வாலசுப்பிரமணியபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் போது, சாவியை வீட்டுக்கு வெளியே ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு செல்வது வழக்கமாம். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர் வெளியே சென்றுள்ளனர். மாலையில் திரும்பி வந்தபோது, மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே சென்றதுடன், பீரோவையும் திறந்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்