ஜோதிடம் பார்ப்பது போல் பெண்ணிடம் நகை திருட்டு

ஜோதிடம் பார்ப்பது போல் பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-30 21:04 GMT

மேலூர், 

மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்தில் உள்ள கண்மாய்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி செல்வி (வயது40) கூலி தொழிலாளி. இவர் வீட்டில் தனியாக இருந்த போது அவ்வழியே வந்த ஒருவரிடம் ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அந்த நபர் நூதன முறையில் ஒரு பவுன் தங்க குண்டுமணி மற்றும் தாலியையும் ரூ.ஆயிரம் பணத்தையும் திருடிக்கொண்டு தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்