பெண்ணிடம் நகை திருட்டு

திருவாடானை அருகே பெண்ணிடம் நகை திருடப்பட்டது.

Update: 2023-05-22 18:45 GMT

தொண்டி,

திருவாரூர் மாவட்டம் லட்சுமணக்குடி, காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவருடைய மனைவி செல்லச்சி (வயது 48). இவர் சம்பவத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக திருவாடானை தாலுகா சோளியக்குடியை செய்யது முகமது தர்காவில் இரவு தங்கி உள்ளார். அப்போது மர்ம நபர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்கச்சங்கிலி திருடி சென்று விட்டார். இது குறித்து அவர் தொண்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்