பலசரக்கு கடையில் நகை திருட்டு

பலசரக்கு கடையில் நகையை திருடி சென்றனர்.

Update: 2023-06-30 20:33 GMT

சிவகாசி, 

சாத்தூர் படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பம் (வயது 42). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் இருந்த போது அங்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெற்றிலை, பாக்கு கேட்டுள்ளார். இதனை எடுக்க புஷ்பம் கடையின் உள்ளே சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகையை காணவில்லை. அந்த நகையை கடைக்கு வந்த வாலிபர் தான் எடுத்து சென்று இருக்க வேண்டும் என புஷ்பம், சாத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்