வீடு புகுந்து 12 பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 12 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2023-04-23 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது புலியூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புநாதன். இவரது மனைவி முத்துராக்கு (வயது 42). சம்பவத்தன்று இவரது குடும்பத்தினர் அனைவரும் இரவு வீட்டின் முன்கதவை திறந்து வைத்து தூங்கி உள்ளனர். அப்போது வீட்டின் ஹாலில் உள்ள அலமாரியின் மீது 12 பவுன் நகையை கழட்டி வைத்துள்ளனர். நள்ளிரவில் அடையாளம் தெரியாத சிலர் வீட்டின் உள்ளே புகுந்த அலமாரியின் மீது இருந்த 12 பவுன் நகை மற்றும் பணம் ரூ.22 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அன்புநாதன் மனைவி முத்யணதுராக்கு திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி வழக்கு பதிந்தும் திருடிய மர்ம மனிதர்கள் குறித்தும் விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்