ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடப்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

கொட்டாம்பட்டி, 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியை சேர்ந்தவர் சின்னையா. இவருடைய மனைவி கிருஷ்ணவேனி (வயது 55). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் விராலிமலை அருகே உள்ள போலம்பட்டியில் உள்ள மருமகள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் மருதிபட்டிக்கு இரண்டு பேரக்குழந்தைகளுடன் அரசு பஸ்சில் கொட்டாம்பட்டிக்கு வந்தார். பின்னர் சிங்கம்புணரிக்கு செல்வதற்காக மற்றொரு அரசு பஸ்சில் ஏறினார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் செயின் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணவேனி கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்