நிலக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

நிலக்கோட்டையில் பூட்டிக்கிடந்த ஆசிரியர் வீட்டில் 3 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-05-31 14:10 GMT

நிலக்கோட்டை இ.பி.காலனியில் வசித்து வருபவர் சரவணன் (வயது 48). இவர் நிலக்கோட்டை அருகே சீதாபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணன் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பழைய வத்தலக்குண்டுவில் வசிக்கும் தந்தையை பார்ப்பதற்காக சென்றார். இதனால் அவரது வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை திருடி சென்றனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் சரவணன் தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாார்.

Tags:    

மேலும் செய்திகள்