விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-30 17:07 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருடைய மனைவி ஜெயந்தி (35) என்பவர் கடந்த 28-ந் தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு புதுச்சேரி மாநிலம் மடுகரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் மாலை ஜெயந்தி, தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.

நகை திருட்டு

உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 13 பவுன் நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்