மளிகைக்கடையில் பெண்ணிடம் நகை பறிப்பு
சமயபுரம் அருகே மளிகைக்கடையில் பெண்ணின் வாயில் துணிைய திணித்து மர்ம ஆசாமிகள் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
சமயபுரம் அருகே மளிகைக்கடையில் பெண்ணின் வாயில் துணிைய திணித்து மர்ம ஆசாமிகள் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
மளிகைக்கடை
சமயபுரம் அருகே உள்ள ஒத்தக்கடை வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பபிள்ளை. இவரது மனைவி மாரியாயி (வயது 48). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்கள் பொருட்கள் வாங்குவது போல் பேச்சு கொடுத்து திடீரென மாரியாயி வாயில் துணியை திணித்து அவரது கழுத்தில்இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
தப்பி ஓட்டம்
துணிைய வாயில் திணித்ததால் அவரால் சத்தம் போடமுடியவில்லை. எனினும் அவர் மர்ம ஆசாமிகளுடன் போராடியதில் சங்கிலி அறுந்து ஒரு பகுதி ஆசாமிகளிடமும், ஒரு பகுதி அறுந்து கடைக்குள்ளும் விழுந்தது. பின்னர் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.