கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு
பாளையங்கோட்டையில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர் ஒருவர் நகையை பறித்துச் சென்றார்.
பாளையங்கோட்டை பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மனைவி காந்திமதி (வயது 50). இவர் நேற்று முன்தினம் காலையில் தனது வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மா்ம நபர்கள் காந்திமதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.